உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு திருடிய 4 பேர் கைது
- கடலூர் அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஒரு தொழிற்சாலையில் ஒரு கும்பல் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே சிப்காட்டில் தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் சிப்காட்டில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலையில் ஒரு கும்பல் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த 650 கிலோ இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடி கொண்டு தப்பி ஓடினர். இதன் மதிப்பு சுமார் 35 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் அங்குள்ள சிசிடிவி சோதனை செய்து பார்த்தபோது நான்கு நபர்கள் உள்ளே வந்து இரும்பு பொருட்கள் திருடியது தெரிய வந்தது.
இது குறித்து தொழிற்சாலை மேலாளர் ராஜேந்திர பிரசாத் கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பச்சையாங்குப்பம் சேர்ந்தவர்கள் லட்சுமணன் (வயது 37), முத்துக்குமரன் (வயது 37), துளசிதாஸ் (வயது 22), ஈச்சங்காடு சேர்ந்த பிரகாஷ் (வயது 32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.