உள்ளூர் செய்திகள்
உவரி அருகே 8-ம் வகுப்பு சிறுவன் தின்னர் குடித்து சாவு
- சம்பவத்தன்று சிறுவன் தனது வீட்டில் இருந்த பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தான்.
- சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் அவன் பரிதாபமாக இறந்தான்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரி பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் 13 வயது சிறுவன் ஒருவன் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளான்.
சம்பவத்தன்று அவன் தனது வீட்டில் இருந்த பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தான். உடனே அவனை சாத்தான்குளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் நேற்றிரவு அவன் பரிதாபமாக இறந்தான்.
இதுதொடர்பாக உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் தின்னரை தண்ணீர் என நினைத்து தவறுத லாக எடுத்து குடித்தானா? அல்லது தற்கொலை செய்யும் நோக்கத்தில் குடித்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.