உள்ளூர் செய்திகள்
சங்கராபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 39 பேர் மீது வழக்கு பதிவு
- ஆர்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது.
- 39 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அனைத்து பொது சேவை கூட்டமைப்பு சார்பில், சங்கராபுரம் 3 முனை சந்திப்பில் வாணாபுரம் தாலுகா பிரித்ததை மறுவரையறை செய்யக்கோரி கடையடைப்பு, ஆர்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது. இதில் வடபொன்பரப்பி குறுவட்டத்துக்குட்பட்ட 23 கிராமங்களை சங்கராபுரம் தாலுகாவில் இனணக்கக் கோரி சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதில் அனுமதியின்றி, போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சேகர் உள்பட 39 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.