உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே பெண்ணிடம் தகராறு செய்த ஊராட்சி தலைவர் மீது வழக்கு

Published On 2023-09-25 13:21 IST   |   Update On 2023-09-25 13:21:00 IST
  • ஊராட்சி மன்ற தலைவர் விருதகிரி.
  • மது போதையில் ஆவினங்குடி அருகே சென்று கொண்டிருந்தார்.

திட்டக்குடி, செப்.25-

கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டூர் ஊராட்சி மன்ற தலைவராக விருதகிரி (வயது 34) உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை மது போதையில் ஆவினங்குடி அருகே சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த மாடு மீது பைக் மோதியது. இதை மாட்டின் உரிமை யாளரான ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த செந்தில் மனைவி மகாலட்சுமி (39) தட்டி கேட்டுள்ளார்.அப்போது ஊராட்சி மனற தலைவர் விருதகிரி, பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மீண்டும் நேற்று காலை மகாலட்சுமி வீட்டிற்கு ஊராட்சி மன்ற தலைவர் விருதகிரி சென்று தகராறு செய்து அசிங்கமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மகாலட்சுமி ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் விருதகிரியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News