உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே வீடு புகுந்து 4 லட்சம் மதிப்புள்ள நகை பணம் திருட்டு
- செல்வி காஞ்சிபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
- ரூ. 4 லட்சம் மதிப்பு ள்ள பொருட்களை மர்ம நபர்களை யாரோ திருடி சென்றது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கடுவனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் மனைவி செல்வி(வயது52). காஞ்சிபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் நேற்று மதியம் அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 8 பவுன் நகை, 10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் துணிகள் போன்ற மொத்தம் ரூ. 4 லட்சம் மதிப்பு ள்ள பொருட்களை மர்ம நபர்களை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.