உள்ளூர் செய்திகள்
வரலட்சுமி விரதத்தையொட்டி தருமபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூைஜ திரளான பெண் பக்தர்கள் பங்கேற்பு
- இந்த சிறப்பு பூஜையில் மகாலட்சுமிக்கு இனிப்பு வகைகள், பழங்கள், வளையல்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. .
- இதனை தொடர்ந்து விரதம் இருந்த பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி, மஞ்சள், தாலிக்கயிறு பிரசா தமாக வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பிரசித்தி பெற்ற கோட்டை வர மகாலட்சுமி சமேத பரவாசு தேவப் பெருமாள் கோவிலில் இன்று வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வரலட்சுமி நோன்பு விரதம் மேற்கொண்ட பெண்கள் பூஜையில் கலந்து கொண்டனர். இன்று வர மகாலட்சுமி சாமிக்கு பிரம்மாண்ட முறையில் 8000 வளையல்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் மகாலட்சுமிக்கு இனிப்பு வகைகள், பழங்கள், வளையல்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து விரதம் இருந்த பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி, மஞ்சள், தாலிக்கயிறு பிரசா தமாக வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.