உள்ளூர் செய்திகள்

புதிய வகை நோய் தாக்குதலால் சாய்ந்த நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை

Published On 2023-01-31 06:46 GMT   |   Update On 2023-01-31 06:46 GMT
  • 3 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
  • வேளாண்துறையினர் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

மடத்துக்குளம் : 

மடத்துக்குளம் வட்டாரத்தில் நடப்பு சீசனில் 3 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அமராவதி பாசனத்தை ஆதாரமாகக்கொண்டு சாலரப்பட்டி பகுதியிலும், நெல் சாகுபடி செய்து பயிர்கள் வளர்ச்சி தருணத்தில் உள்ளன. இந்நிலையில் புதிய வகை நோய் தாக்குதலால் பயிர்கள் சாய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-  இப்பகுதியில் ஆண்டுக்கு ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே மேற்கொள்ளும் சூழல் உள்ளது. தற்போதைய சாகுபடியில் பயிர்களில் புதிய வகை தாக்குதல் காணப்படுகிறது. தண்டு மற்றும் பிற பகுதிகளில் சேதம் ஏற்பட்டு பயிர்கள் சாய்ந்து விடுகின்றன. இத்தாக்குதல் பெரும்பாலான வயல்களில் காணப்படுகிறது. எவ்வகையான தாக்குதல் என்பது தெரியாததால் கட்டுப்படுத்தும் முறையையும் துவக்காமல் திணறி வருகிறோம். இதே நிலை நீடித்தால் பயிரிழப்பு அதிகரித்து மகசூல் பாதியாக குறைந்து விடும். வேளாண்துறையினர் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News