உள்ளூர் செய்திகள்
விளை நிலத்தில் பதுங்கி இருந்த மரநாயை வனத்துறையினர் பிடித்தனர்.
சின்னசேலம் அருகே விவசாய நிலத்தில் பிடிபட்ட மரநாய்
- விவசாய நிலத்தில் அரிய வகை விலங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- மரநாயை வலை கட்டி பிடிக்க முயற்சி செய்தார்கள். வலையில் சிக்காமல் அங்கிருந்து ஓடியது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய விவசாய நிலத்தில் அரிய வகை விலங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே விஜயகுமார் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினருக்கு அது மரநாய் என்பது தெரிய வந்தது. இது அடுத்து மரநாயை வலை கட்டி பிடிக்க முயற்சி செய்தார்கள். வலையில் சிக்காமல் அங்கிருந்து ஓடியது. இதனால் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிக்கியது. இதையடுத்து வனக் குழுவினர் அந்த மரநாயை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வலை கொட்டலாம் காப்பு காட்டு பகுதியில் விட்டனர்.