உள்ளூர் செய்திகள்

திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் புகார் கொடுக்க வந்தபோது எடுத்த படம்.

ஆவணப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பா.ஜனதாவினர் போலீசில் புகார்

Published On 2022-07-11 15:04 IST   |   Update On 2022-07-11 15:04:00 IST
  • நாமக்கல் மாவட்ட செயலாளர் சுபாஷ் தலைமையில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
  • புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு இந்த புகாரை அனுப்பி ஊரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

திருச்செங்கோடு:

காளியம்மன் படத்தை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து வெளியிட்ட ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் நாகராஜன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு நாமக்கல் மாவட்ட செயலாளர் சுபாஷ் தலைமையில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

மேலும் சமூக வலை–தளத்தில் வெளியிட்ட ஆவணப்பட தயாரிப்பா–ளர், நடிகர்கள் மற்றும் இயக்குனர் லீலா மணி–மேகலை ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த ஆவண படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் புகார் கொடுத்தனர்.

அப்போது மாவட்ட பொதுச் செயலாளர் வடிவேல், முன்னாள் நகர தலைவர் ஜே பி எல். நாகராஜன் துணைத் தலைவர்கள் ஜோதிடர் தங்கவேல், ராஜ்குமார், ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் மகேஷ் நகர தலைவர் கோபாலகிருஷ்ணன், ஓ பி சி பிரிவு மாவட்ட பொதுச் செயலாளர் ரஜினி, முன்னாள் ஒன்றிய இளைஞரணி தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு இந்த புகாரை அனுப்பி ஊரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News