சங்கரன்கோவிலில் தேவர் படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
- தேவர் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் உருவ படத்திற்கு அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகையா, ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலா ளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், நகர பொருளாளர் வேலுச்சாமி, அவை தலைவர் அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி ராமநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், சரவணகுமார், பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல் ஹமீது, தலைமை பேச்சாளர் ராமசுப்பிர மணியன், குருவிகுளம் ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் நிவாஸ், செந்தில்குமார், குட்டி மாரியப்பன், வெள்ளி முருகன், குமார் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.