அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- கே.பி. முனுசாமி தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
- கூட்டுறவு வங்கி தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம்,
கோடை வெயிலின் தாகத்தை தணிக்க கிருஷ்ண கிரி மாவட்டம், காவேரிப் பட்டினம் மேற்கு ஒன்றியம், நகர அ.தி.மு.க. சார்பில் காவேரிப்பட்டினம்- பாலக்கோடு பிரிவு சாலை மற்றும் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. துணை பொது செயலாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சமரசம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி. எம். சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் விமல், முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம்குமார், அபிராமி மதனகோபால், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ,கூட்டுறவு வங்கி தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.