ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்தபடம்.
கடையநல்லூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
- தமிழகம் முழுவதும் அ.திமு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கடையநல்லூர்:
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை ஆகிய காரணங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அ.திமு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடையநல்லூர் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ் சாலை மணிக்கூண்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மாவட்ட அவைத் தலைவர் வி.பி.மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பையா பாண்டியன், கடையநல்லூர் நகர செயலாளர் முருகன், அச்சன்புதூர் பேரூர் செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான சுசீகரன் உட்பட நகர, பேரூர், ஒன்றிய செயலாளர்கள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.