உள்ளூர் செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளரும், குமாரகிரி ஊராட்சி தலைவருமான ஜாக்சன்துரை மணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.


தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஜெயலலிதா படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

Published On 2023-02-24 14:34 IST   |   Update On 2023-02-24 14:34:00 IST
  • தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளரும், குமாரகிரி ஊராட்சி தலைவருமான ஜாக்சன்துரை மணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
  • எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய உறுதியேற்போம் என்று கோஷம் எழுப்பப்பட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் கோரம்பள்ளத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளரும், குமாரகிரி ஊராட்சி தலைவருமான ஜாக்சன்துரை மணி தலைமை தாங்கினார்.

வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளரும், அய்யனடைப்பு ஊராட்சி தலைவருமான ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மதியழகன், ஒன்றிய கவுன்சிலர் தங்கத்துரை, ஒன்றிய அவைத் தலைவர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜவகர் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு லட்டுக்களை வழங்கினார்.

அப்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய உறுதியேற்போம் என்று கோஷம் எழுப்பினர்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை செயலாளர் துரைராஜ் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் புதுக்கோட்டை பஜார், கூட்டம்புளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.

Tags:    

Similar News