உள்ளூர் செய்திகள்

ஆ.ராசா, அண்ணாமலை

ஆ.ராசா மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்கிறார்... வீடியோ வெளியிட்டு அண்ணாமலை குற்றச்சாட்டு

Published On 2022-09-13 15:08 IST   |   Update On 2022-09-13 15:08:00 IST
  • தமது டுவிட்டர் பதிவில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
  • ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துதே குறிக்கோள்.

இந்து மதம் குறித்த திமுக எம்.பி.ஆ.ராசாவின் பேச்சை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும் வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  

அதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:

மன்னிக்கவும், இது தமிழ்நாட்டின் அரசியல் பேச்சு நிலை. திமுக எம்.பி. மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளார். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags:    

Similar News