உள்ளூர் செய்திகள்
- மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே காடுெவட்டாங்குறிச்சி பகுதியில் உள்ள ஓடையில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் கொளஞ்சிநாதன் தனது உதவியாளருடன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஓடை மணலை மாட்டு வண்டியில் அள்ளிக் கொண்டிருந்தவர்களை கிராம நிர்வாக அலுவலர் பிடித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வாணத்தரியான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த பிச்சமுத்துவின் மகன் மணிகண்டன்(வயது 27), கண்ணதாசன்(50), அறிவானந்தன்(58) ஆகியோர் மாட்டு வண்டியின் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.