உள்ளூர் செய்திகள்
அரியலூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
- அரியலூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- சுற்றுச்சூழல் கலந்துரையாடலில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது
அரியலூர்,
அரியலூரில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லயன்ஸ் பெனிடிக்ட் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன பயிற்றுநர் ராஜேஸ்வரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணியானது திருச்சி சாலை, பிரதான கடைவீதி, ஜெயங்கொண்டம் சாலை வழியாக சென்று அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு நிறைவடைந்து. அங்கு அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன் பேரணியை முடித்து வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். பின்னர் அவர் சுற்றுச்சூழல் கலந்துரையாடலில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.