உள்ளூர் செய்திகள்

வேளாண் வளர்ச்சி திட்ட மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடந்தபோது எடுத்தபடம்.


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்

Published On 2022-06-19 13:28 IST   |   Update On 2022-06-19 13:28:00 IST
  • மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து மூத்த வேளாண்மை அலுவலர் லலிதா பரணி விளக்கி கூறினார்.
  • விவசாயிகள் தங்கள் நிலத்தில் சேகரித்த மண் மாதிரிகளை ஆய்வுக்காக கொடுத்தனர்.

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான சிவலார் பட்டி மற்றும் வெம்பூரில் கோவில்பட்டி நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தின் மூலம் மண் மாதிரி மற்றும் பாசன நீர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கல்பனா தேவி தலைமை தாங்கினார். மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் மண் மாதிரி செயல் விளக்கத்தை பற்றி கோவில்பட்டி நடமாடும் மண் பரிசோதனையின் மூத்த வேளாண்மை அலுவலர் லலிதா பரணி விளக்கி கூறினார்.

கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் சேகரித்த மண் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்துக் கொடுத்தனர். முகாமில் புதூர் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் காயத்ரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News