உள்ளூர் செய்திகள்
ஆய்வு நடைபெற்றபோது எடுத்த படம்.
தென்காசி மேலகரம் பகுதியில் திடக்கழிவுகள் குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு
- உரம் தயாரித்தல் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் பார்வையிட்டார்.
- பணிகளில் ஏற்படும் குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சியில் திடக்கழிவு வளம் மீட்பு பூங்காவில் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் 'திடீர்' ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அங்கு நடைபெற்று வரும் உரம் தயாரித்தல், மக்கும் குப்பை, மக்கா குப்பையை பிரித்தெடுத்தல் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அவற்றில் ஏற்படும் குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.