உள்ளூர் செய்திகள்

இடிந்து விழுந்த கட்டிடம்.

தஞ்சை கீழராஜவீதியில், பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது

Published On 2022-11-05 15:42 IST   |   Update On 2022-11-05 15:42:00 IST
  • இடிபாடுகள் அகற்றும் பணி மற்றும் மின் இணைப்பு சீரமைக்கும் பணி.
  • கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

தஞ்சாவூர்:

தஞ்சை கீழராஜவீதி மெயின் சாலையில் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் தற்போது யாரும் குடியிருக்கவில்லை. இருந்தாலும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் டெய்லர் கடை, கேஸ் சர்வீஸ் சென்டர் இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென இந்த கட்டிடம் இடியத் தொடங்கியது.

மேலும் அதன் அருகில் இருந்த மின் கம்பமும் சாய்ந்து விழுந்தன. சிறிது நேரத்தில் கட்டிடத்தில் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது.இதற்கிடையே வடிகால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்ட 25வது வார்டு கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி உடனடியாக இதுகுறித்து கிழக்கு போலீசார், தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு அனைத்து அதிகாரிகளும் விரைந்து வந்தனர். மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். இதையடுத்து இடிபாடுகள் அகற்றும் பணி மற்றும் மின் இணைப்பு சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இரவு நேரம் என்பதால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் ஆகியது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கும் கீழ ராஜ வீதியில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News