உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

தஞ்சையில் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கல்

Published On 2023-09-16 09:51 GMT   |   Update On 2023-09-16 09:51 GMT
  • விடுப்பட்டவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • தஞ்சை மாவட்டத்தில் 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அரங்கத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வங்கி பற்று அட்டைகள் (ஏ.டி.எம் அட்டைகள்) வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.

அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழநிமா ணிக்கம் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது :-

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது.

குடும்பத்திற்காக வாழ்நா ளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.

ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது, பெண்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியா தையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.

தஞ்சை மாவட்டத்தில் 549869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதில் பெண்களுக்கு அவரவர் கொடுத்த வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டு உள்ளது.

விடுப்பட்டவர்களுக்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கிடைக்காதவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் அணுகி மேல்முறையீடு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்யாண சுந்தரம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி .கே .ஜி நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) உமா மகேஸ்வரி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தவவளவன் மற்றும் அலு வலர்கள், வங்கியாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News