உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் விளைந்துள்ள அவகோடா பழங்கள்.

கொடைக்கானலில் விளைச்சல் அதிகரித்தும் விலை வீழ்ச்சி அடைந்த அவகோடா

Published On 2022-09-23 10:12 IST   |   Update On 2022-09-23 10:12:00 IST
  • இவ்வருடம் அவகோடா விளைச்சல் சற்று கூடுதலாக இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
  • ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகி வந்த பழங்கள் தற்போது விலையில் கடும் சரிவை சந்தித்துள்ளது.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் அதிக அளவில் தற்போது அவக்கோடா பழங்கள் விளைந்துள்ளன.கடந்த வருடத்தை காட்டிலும் இவ்வருடம் விளைச்சல் சற்று கூடுதலாக இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ குணமும், அழகு கலைக்கும் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள்களில் ஒன்றாகவும் வெண்ணெய்ப் பழம் என்று அழைக்கப்படும் அவக்கோடா பழங்கள் உள்ளன.வயிறு உபாதைகளுக்கும் இவ்வகை பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன.உடலை மெருகூட்டும் இவ்வகை பழங்கள் தற்போது விற்பனையில் சரிவைக் கண்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகி வந்த பழங்கள் தற்போது விலையில் கடும் சரிவை சந்தித்துள்ளது.வெளி மாநிலங்கள், வெளி நாடுகள் என ஏற்றுமதியாகி வரும் அவக்கோடா பழங்கள் தற்போது கிலோ ரூ. 200 -க்கும் கீழ் விற்பதால் விவசாயிகள் விளைவிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களுக்குக்கூட கட்டுபடியாகவில்லை என்ற கவலையில் உள்ளனர்.

எனவே கொடைக்கானலிலேயே அரசு கொள்முதல் செய்யும் பழப்பண்ணையை நிறுவி பழ உற்பத்தியாளர்களுக்கு முறையான விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News