உள்ளூர் செய்திகள்
பரமத்தி வேலூர் பகுதிகளை சேர்ந்த ஊராட்சித் தலைவர்களுக்கு விருது
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
- இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த ஊராட்சி தலைவர்களுக்கான விருதுகளை வழங்கினார்கள்.
பரமத்தி வேலூர்:
தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த ஊராட்சி தலைவர்களுக்கான விருதுகளை வழங்கினார்கள்.
இதில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கபிலக்குறிச்சி ஊராட்சி தலைவர் வடிவேல், பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மாணிக்கநத்தம் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி, கூடச்சேரி ஊராட்சி தலைவர் சுப்பிரமணி, மேல்சாத்தம்பூர் ஊராட்சி தலைவர் யோகாம்பிகா ஆகியோருக்கும் தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக விருதுகள் வழங்கப்பட்டன.