உள்ளூர் செய்திகள்

பரமத்தி வட்டார வள மையத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

பரமத்தி வட்டார வள மையத்தில் தன்னார்வலர்களுக்கு அடிப்படை எண்ணறிவு பயிற்சி

Published On 2022-12-16 12:45 IST   |   Update On 2022-12-16 12:45:00 IST
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வட்டார வள மையத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
  • 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வியை வழங்கும் பொருட்டு 61 தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வட்டார வள மையத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுபா தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் கவுரி, பயிற்சி நோக்கங்கள் பற்றி தன்னார் வலர்களுக்கு விளக்கமாக எடுத்து கூறினார். 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வியை வழங்கும் பொருட்டு 61 தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் அடிப்படை எண்ண றிவு, முதலுதவி அடிப்படை சட்டங்கள், உடல்நலம், பேரிடர் மேலாண்மை, சாலை பாதுகாப்பு, உதவித்தொகை திட்டங்கள், இணையவழி சேவை, பணமில்லா பரிமாற்றம், ஏ.டி.எம் பயன்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரிய பயிற்றுநர்கள் செல்வராணி, பார்வதி மற்றும் ஆசிரியர் வளர்மதி ஆகியோர் இப்பயிற்சியின் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

Tags:    

Similar News