தடகள போட்டியில் பாரத் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை
- சாதனை படைத்த மாணவிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
- இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விஜய குமார், துணை முதல்வர் நசீர்பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் தடகள போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தஷிதா மற்றும் தயனிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவி தஷிதா 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடமும், தயனிதா நீளம் தாண்டுதலில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-ம் இடமும் பெற்று மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் இந்த மாணவிகள் மாநில அளவில் நடை பெறும் போட்டிகளில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி களை பாரத் கல்வி குழு மங்களின் நிறுவனர் மணி சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார்.
அவர் பேசும் போது மாணவ, மாணவிகள் எதிர் வரும் விளையாட்டு போட்டிகளில் மாநில அள விலும், தேசிய அளவிலும் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும் என்று கூறி பரிசுகளை வழங்கினார். மேலும் சாதனை படைத்த மாணவிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
வெற்றிக்கு உறுதுணை யாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் தமீசை பள்ளியின் நிறுவனர் மணி பாராட்டி னார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விஜய குமார், துணை முதல்வர் நசீர்பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.