உள்ளூர் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது
- சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
- சிறுமி பெற்றோர் டவுண் மகளிர் போலீசில் புகார் செய்தனர்
சேலம்:
சேலம் அன்னதானப் பட்டி நரசிம்ம செட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 31). இவர் ஒரு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த சிறுமி பெற்றோர் டவுண் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபர் கார்த்திக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.