உள்ளூர் செய்திகள்
சேலத்தில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
- சேலம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி வசந்தம் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடித்தனர்.
- பீரோவில் இருந்த 4 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி வசந்தம் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தகிரி (வயது 36). இவரது மனைவி கிராந்தி (32). இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டைப் பூட்டி விட்டு, அருகில் வசிக்கும் தனது தாயார் வீட்டிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் முன்பக்க கதவு, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராந்தி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கிராந்தி கருப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.