உள்ளூர் செய்திகள்
தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி சாவு
- சாலையில் செல்லும் போது மண் சறுக்கி கீழே விழுந்ததில் தலைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
- சசிகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சாணாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மகன் சசிகுமார் (வயது27). இவர் கட்டிட மேஸ்திரி.
இவர் கடந்த வாரம் திருப்பூர் பகுதியில் கட்டிட வேலை செய்துவிட்டு ஒரு வாரமாக சொந்த ஊரில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சானரபட்டி அருகே உள்ள முத்து மாரியம்மன் கோவில் சாலையில் செல்லும் போது மண் சறுக்கி கீழே விழுந்ததில் தலைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு பெரும்பாலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சசிகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.