உள்ளூர் செய்திகள்

ஜே.சி.பி. மூலம் சீரமைப்பு பணிகள் நடந்த காட்சி.

களக்காடு அருகே கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

Published On 2022-07-31 15:19 IST   |   Update On 2022-07-31 15:19:00 IST
  • களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை.
  • கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன. இதனால் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டது.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை.

இதனைதொடர்ந்து கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன. இதனால் கால்வாயில் நீரோட்டம் தடை பட்டது.

மேலும் மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது, அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கரைகளை உடைத்து கிராமங்களுக்குள் புகும் அபாயகரமான சூழல் நிலவியது.

எனவே புதர் மண்டி கிடக்கும் இறையடிக்கால்வாயை சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார் உத்தரவின் பேரில், உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், உதவி பொறியாளர் பாஸ்கர், பாசன உதவியாளர் ஆனந்தன் மற்றும் பொதுப்பணித்துறையினர் புதர் மண்டி கிடந்த இறையடிக்கால்வாயை நேரில் பார்வையிட்டு அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளதா? என்று அளவீடு செய்யப்பட்டது.

அதனைதொடர்ந்து நேற்று இறையடிக்கால்வாய் தூர் வாரும் பணி தொடங்கியது. பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் தூர் வாரப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News