உள்ளூர் செய்திகள்

பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூர்களில் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பயணிகளால் தருமபுரி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல்.  

தருமபுரி பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

Published On 2023-01-18 15:20 IST   |   Update On 2023-01-18 15:20:00 IST
  • மாலை 6 மணி முதலே பஸ் நிலையத்தில் குவியத் தொடங்கினர்.
  • போக்குவரத்து துறை பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளை இயக்கியது.

தருமபுரி,

தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப்பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு கடந்த சனிக்கிழமை முதல் நேற்று செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை அளித்தது.

இதனை தொடர்ந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த தமிழர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு வெள்ளிக்கிழமை முதலே வர தொடங்கினார்.

சனிக்கிழமை போகிப் பண்டிகை, ஞாயிற்றுக் கிழமை தைப்பொங்கல், திங்கட் கிழமை மாட்டுப்பொங்கல், செவ்வாய்க்கிழமை காணும் பொங்கல் மற்றும் கரிநாள் என குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

நேற்று தருமபுரி மாவட்டத்தில் பல கிராமங்களில் எருதாட்டம், மஞ்சு விரட்டு, பாரம்பரிய விளையாட்டு, என மகிழ்ச்சியோடு குதூகலமாக கொண்டா டிய பொதுமக்கள் தங்க ளுடைய பணிகளுக்கு செல்வதற்காக நேற்று மாலை 6 மணி முதலே பஸ் நிலையத்தில் குவியத் தொடங்கினர்.

இன்று காலை 8 மணி வரை பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தருமபுரி மண்டல அரசு போக்குவரத்து துறை பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளை இயக்கியது.

Tags:    

Similar News