உள்ளூர் செய்திகள்

தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்

Published On 2023-04-04 14:32 IST   |   Update On 2023-04-04 14:32:00 IST
  • பங்குனி உத்திரத்தையொட்டி கடந்த 26 -ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
  • 9 -வது திருநாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

சிவகிரி:

சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிர மணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை யொட்டி கடந்த மாதம் 26 -ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தார் சார்பில் திருவிழா கொண்டா டப்பட்டது. நேற்று 9 -வது திருநாள் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. சிவகிரி ஜமீன் தார் சேவுகப்பாண்டி யன் என்ற விக்னேஷ்வர சின்னத்தம்பியார் தேரடி முனியாண்டி கோவில் அருகே தேரின் வடத்தை தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேர் நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து நிலையத்திற்கு வந்தது.

இதில் பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீத கிருஷ்ணன், கவுன்சிலர்கள், அலுவலர்கள், அனைத்து சமுதாய பொறுப்பாளர்கள், டாக்டர் செண்பகவிநாயகம், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று பங்குனி உத்திரத்தை யொட்டி தெப்பத்தேர் திருவிழா நடைபெற உள்ளது.

Tags:    

Similar News