கணவருடன் கள்ளக்காதல் - இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து தாக்கிய பெண்
- இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் கடந்த 2 ஆண்டுகளாக சீட்டு போட்டு வருகிறார்.
- இது குறித்து இளம்பெண் சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி விட்டது.
இவர் கூலி வேலை செய்து வருகிறார். இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் கடந்த 2 ஆண்டுகளாக சீட்டு போட்டு வருகிறார்.
இதனால் இளம்பெண் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அந்த பெண்ணின் கணவருக்கும் இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணின் கணவரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. அவர் தனது கணவரை கண்டித்தார். ஆனாலும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது.
இது அந்த பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் இளம்பெண் சீட்டுக்கு கட்டிய ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுக்ாமல் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இளம் பெண்ணை தொடர்பு கொண்ட பெண், நீ கேட்ட சீட்டு பணத்தை தருகிறேன். வீட்டில் வந்து வாங்கி கொள் என கூறி அழைத்தார்.
பணம் வாங்கும் ஆசையில் இளம்பெண்ணும் அங்கு சென்றார். அங்கு சென்றதும், அவர் இளம்பெண்ணிடம் தனது கணவருடனான கள்ளக்கா தலை கைவிடுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பெண், இளம்பெண்ணை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து இளம்பெண் சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கணவருடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.