உள்ளூர் செய்திகள்

நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமைகளை கருவிகள் மற்றும் மோப்ப நாய் மூலம் சோதனை செய்த காட்சி.

நெல்லை ரெயில் நிலையத்தில் சோதனை- பட்டாசுகளுடன் வந்த 2 பயணிகள் கைது

Published On 2023-11-09 14:43 IST   |   Update On 2023-11-09 14:43:00 IST
  • தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி சென்னை, கோவை உள்ளிட்ட வெளி மாவட் டங்களில் இருந்து ஏராள மானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
  • அவ்வாறு வருபவர்கள் ரெயிலில் பட்டாசுகள் கொண்டு வருவதாக நெல்லை சந்திப்பு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நெல்லை:

தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி சென்னை, கோவை உள்ளிட்ட வெளி மாவட் டங்களில் இருந்து ஏராள மானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

அவ்வாறு வருபவர்கள் ரெயிலில் பட்டாசுகள் கொண்டு வருவதாக நெல்லை சந்திப்பு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த இன்டர்சிட்டி ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளை ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது சரவணன் என்ற வாலிபர் 1-வது நடை மேடையில் சாக்கு பையில் பட்டாசுகள் கொண்டு வந்தார். அவற்றை போலீ சார் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதே போல் அந்த ரெயிலில் ஏறி திருவனந்த புரம் செல்வதற்காக மோனு சுமன்(வயது 41) என்ற நபர் வந்தார். அவரை சோதனை செய்தபோது அவரிடம் 10 பெட்டிகளில் பட்டாசுகள் இருந்தன.

இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News