உள்ளூர் செய்திகள்
சிதம்பரம் பல்கலைக்கழக மாணவி கடத்தல்
- சிதம்பரம் பல்கலைக்கழக மாணவி கடத்தப்பட்டார்.
- புகார் மனுவில் தனது மகளை சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் கடத்தியதாக தெரிவித்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர்கோல்டன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார். அவரது மகள் சுவேதா (வயது 24). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகத்தில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி பல்கலைகழகத்துக்கு செல்வதாக சுவேதா கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அசோக்குமார் தனது மகளை உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகளை சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் கடத்தியதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து சுவேதா என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.