உள்ளூர் செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே இரு தரப்பினர் மோதல்: 4 பெண்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2023-04-08 14:11 IST   |   Update On 2023-04-08 14:11:00 IST
  • கீதா. சம்பவத்தன்று இவர் ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
  • அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் பார்த்துக்கொண்டு சிரித்ததாக கூறப்படுகிறது.

கடலூர்:

நெல்லிக்குப்பம் அடுத்த பி. என்.பாளையத்தை சேர்ந்தவர் கீதா. சம்பவத்தன்று இவர் ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் பார்த்துக்கொண்டு சிரித்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கீதா கேட்டபோது முத்துக்குமரன் மனைவி மங்கைக்கும், கீதா தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் மங்கை மற்றும் கீதா ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் மங்கை கொடுத்த புகாரின் பேரில் கீதா, ராஜா, அசலாம்பாள், ராதா ஆகியோர் மீதும், கீதா கொடுத்த புகாரின் பேரில் மங்கை மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News