உள்ளூர் செய்திகள்

மோப்பிரிபாளையத்தில் கொடிசியா தொழிற்பேட்டையில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2022-11-05 14:47 IST   |   Update On 2022-11-05 14:47:00 IST
  • அச்சு வார்ப்பு தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது.
  • ராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் துவக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

சூலூர்,

சூலூர் அருகே மோப்பிரிப்பாளையத்தில் கொடிசியா தொழில்பேட்டை வளாகம் அமைந்துள்ளது.

இங்கு தற்போது 25-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் விரைவில் துவக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடிசியா தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அமைந்துள்ள தொழிற்சாலைகளையும் உள்கட்டமைப்பு வசதிகளையும், புதிதாக துவங்கப்பட உள்ள ஆலைகளின் இடங்களையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர் கள்ளப்பாளையத்தில் 116 ஏக்கர் பரப்பளவில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள கொடிசியா தொழில் பூங்கா, சொலவம்பாலையத்தில் 42.4 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.06 கோடி மதிப்பீட்டில் கொசிமா தொழில் பூங்கா, வெள்ளலூரில் ரூ.4.47 கோடி மதிப்பீட்டில் வார்ப்பு குழுமம், மதுக்கரையில் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் பொறியியல் குழுமத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிட்டாம்பாளையத்தில் 316.04 ஏக்கர் பரப்பளவில் ரூ.24.16 கோடி மதிப்பீட்டில் அறிஞர் அண்ணா தொழி்ல் கூட்டுறவு தொழிற்பேட்டை, சின்னவேடம்பட்டியில் ரூ.5.73 கோடியில் அலுமினியம் அச்சு வார்ப்பு தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது.

மோப்பிரிபாளையத்தில் சிஎன்சி எந்திரங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகள், தொழில் பூங்காவின் வரைபடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து மோப்பிரிபாளையத்தில் பெரியார் நினைவு சமத்துபுரம் மற்றும் அரசூரில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ரூபாய் 5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் ஆகியவற்றில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மோப்பிரி பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், வார்டு உறுப்பினர்கள், அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ், அரசூர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ், அரசூர் ஊராட்சி செயலாளர் கணேச மூர்த்தி மற்றும் பலர் இருந்தனர்.

Tags:    

Similar News