உள்ளூர் செய்திகள்

கடற்கரை தூய்மை பணியில் கல்லூரி மாணவர்கள்

Published On 2022-09-11 13:07 IST   |   Update On 2022-09-11 13:07:00 IST
  • கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக், நெகிழி, கண்ணாடி பொருட்கள் உள்ளிட்டவைகளை வீசி செல்கின்றனர்.
  • கரை ஒதுங்கிய கழிவு பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்து தூய்மை பணியாளர்கள் உதவியுடன் அகற்றினர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் தூய்மை கடற்கரை பாதுகாப்பான கடல் என்ற கடற்கரை தூய்மை பணி நடைபெற்றது.

மத்திய புவி அறிவியல் அமைச்சகம், தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம், மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஆகிய சார்பில் நடைபெற்ற இந்த தூய்மை கடற்கரை தூய்மை பணியில் பூம்புகார் கலைக்கல்லூரி விலங்கியல் துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

கடற்கரை பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களால் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக், நெகிழி, கண்ணாடி பொருட்கள், செருப்புகள் மற்றும் கடலில் அடித்து வரப்படு கரை ஒதுங்கிய கழிவு பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்து தூய்மை பணியாளர்கள் உதவியுடன் அகற்றினர்.

இதில் இந்திய விலங்கியல் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனர் சிவபெருமான், விஞ்ஞான பிரசாத் புதுநிலை விஞ்ஞானி வெங்கடேஷ்வரன், அறிவியல் பலகை மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார், பூம்புகார் கலை க்கல்லூரி விலங்கி யல்துறை கோகுலகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பூம்புகார் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.

Tags:    

Similar News