பாளையில் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி முகாம்
- நெல்லை மாவட்ட ஆசிரியர்களுக்கான 2 நாட்கள் கணினி பயிற்சி முகாம் பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
- பயிற்சியில் சுமார் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
நெல்லை:
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமன்றம் மற்றும் டெல்லி தேசிய அறிவியல் தொழில்நுட்ப மன்றம் இணைந்து நெல்லை மாவட்ட ஆசிரியர் களுக்கான 2 நாட்கள் கணினி பயிற்சி முகாம் பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோல்டன் எபநேசர் ஜெபமணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசு தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் சவுந்திரபாண்டியன், முதல்வர் உஷா காட்வின் மற்றும் துணை முதல்வர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முகாம் குறித்து விளக்கினர். இப்பயிற்சி முகாமை கல்லூரியின் விலங்கியல் துறைத்தலைவர் ஜெயபிரபா ஒருங்கிணைந்து நடத்தினார்.
இப்பயிற்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த சுமார் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் வேதியியல்துறை உதவி பேராசிரியை ஷகினா நன்றி கூறினார். மேலும் இந்த பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், 2 நாட்கள் பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என தெரிவித்தனர்.