உள்ளூர் செய்திகள்

சாமி சிலையை நடுரோட்டில் வைத்து மறியல் செய்தனர்.

கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல்

Published On 2022-06-14 14:49 IST   |   Update On 2022-06-14 14:49:00 IST
  • ராஜகிரி மெயின் ரோட்டில் வந்தபோது இருதரப்பினரிடையே பல்லக்கு தூக்குவதில் தகராறு ஏற்பட்டது.
  • சாமி சிலை யானது சாலையிலிருந்து எடுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரி அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் சுவாமி வீதிஉலா முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வந்தனர். அப்போது ராஜகிரி மெயின் ரோட்டில் வந்தபோது, இருதரப்பினரிடையே பல்லக்கு தூக்குவதில் தகராறு ஏற்பட்டது.

இதனால் நடுரோட்டில் சாமியை இறக்கி வைத்து விட்டு இரு தரப்பினரும் கற்களாலும், மூங்கிலாலும் தாக்கிக் கொண்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தால் தஞ்சாவூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கபிஸ்தலம், திருவையாறு, பாபநாசம், சாலியமங்கலம் வழியாக பஸ்கள் மாற்றி விடப்பட்டன.சம்பவ இடத்திற்கு பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், பாபநாசம் காவல்துறை கண்காணிப்பாளர் பூரணி, இன்ஸ்பெ க்டர் அழகம்மாள், கோவில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், ராஜகிரி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் விரைந்து வந்து இரு தரப்பினரிடையே

தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் சாமி சிலை யானது சாலையிலிருந்து எடுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவி லை வந்தடைந்தது. இச்ச ம்பவத்தைத் தொடர்ந்து ராஜகிரி பகுதியில்தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு

வருகின்றனர்.

Tags:    

Similar News