உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் கூட்டுறவு வாரவிழா: சிறப்பு கருத்தரங்கம்

Published On 2023-11-17 09:16 GMT   |   Update On 2023-11-17 09:16 GMT
  • மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தலைமைதாங்கினார்
  • தனிமனித வாழ்க்கையில் கூட்டுறவு குறித்து அதிகாரிகள் பேச்சு

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி வருகிற 20-ந்தேதிவரை நடக்க உள்ளது. இதன் 3-வது நாள் நிகழ்ச்சி கூட்டுறவு விற்பனை சங்க மண்டபத்தில் நடந்தது.

அப்போது கூட்டுறவு அமைப்புகளை கணினிமயமாக்குதல்-மேம்படுத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தலைமைதாங்கினார்.

ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், வாழ்வியல் மற்றும் தனிமனித வாழ்க்கையில் கூட்டுறவு மற்றும் அரசியலமைப்பு சட்டம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர் ரா.மது, நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியரும், கூட்டுறவு சார்பதிவாளருமான அய்யனார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News