உள்ளூர் செய்திகள்

கலெக்டர் லலிதா.

வளர்ச்சி திட்ட பணிகள்- கலெக்டர் ஆய்வு

Published On 2022-09-11 13:11 IST   |   Update On 2022-09-11 13:11:00 IST
  • சொக்கன்குளம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டார்.
  • குழந்தைகளுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

சீர்காழி:

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகணி ஊராட்சியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார் ஊராட்சியில் நடைபெற்று வரும் பாரதப்பிரதமர் வீடு கட்டத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளின் விவரங்களை சரிபார்த்தார்.

தொடர்ந்து தென்னங்குடி குளம் சீரமைக்கும் பணி சொக்கன்குளம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளையும் கலெக்டர் லலிதா பார்வையிட்டார்.

தொடர்ந்து நிம்மேலி ஊராட்சியில் அரசு கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டார்.

பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவின் தரம் மற்றும் சுவை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலு வலர் இளங்கோ வன், ஒன்றிய பொறியா ளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, அகணிஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், நிம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் வசந்திகிருபாநிதி, ஒப்பந்தக்காரர் ராஜதுரை, மற்றும் ஊராட்சி செயலர்கள், உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News