உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகராட்சி பஸ் நிலையங்களில் கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூல்

Published On 2022-10-11 14:45 IST   |   Update On 2022-10-11 14:45:00 IST
  • நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக அதாவது சிறுநீர் கழிக்க ரூ 10,மலம் கழிக்க ரூ15 என வசூல் செய்வதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
  • கழிப்பறை முன்பு எந்த அறிவிப்பு பட்டியலும் இல்லை.

தருமபுரி,

தருமபுரி நகராட்சியில் டவுன் பஸ் நிலையம்,புறநகர் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த பஸ் நிலையங்களில் நகராட்சி சார்பில் கழிப்பறைகள் உள்ளது.

சேலம்,பெங்களூர்,சென்னை,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த பஸ் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

தொலைதூரத்தில் இருந்து வரும் பயணிகள் உடல் உபாதையை கழிக்கும் வகையில் நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இங்கு நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக அதாவது சிறுநீர் கழிக்க ரூ 10,மலம் கழிக்க ரூ15 என வசூல் செய்வதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கழிப்பறை முன்பு எந்த அறிவிப்பு பட்டியலும் இல்லை.இதனால் பொதுமக்கள் அவசர உடல் உபாதைக்கு கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

கழிப்பறை முன்பு நகராட்சி சார்பில் எவ்வளவு பணம் வசூல் செய்ய வேண்டும் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News