தருமபுரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
- தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கார் சிலை முன்பு நடைபெற்றது.
- பள்ளி குழந்தைகள் என அனைவரும் கலந்து காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தருமபுரி,
தருமபுரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் தொல் திருமாவளவன் தந்தை தொல்காப்பியன் நினைவு நாள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கார் சிலை முன்பு நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி, தலைமை தாங்கினார். தருமபுரி நகர துணைச் செயலாளர் உமா சங்கர், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் நந்தன், மாவட்ட பொருளாளர் மன்னன், தருமபுரி சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்தி (எ) சமத்துவன், மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் சக்தி, தருமபுரி நகராட்சி 30 வார்டு வி.சி.க. கவுன்சிலர் விஜயலட்சுமி உமாசங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் அம்பேத்வளவன், ரங்கநாதன் (எ) கரிகாலன், ராமதுரை மற்றும் முகாம் பொறுப்பாளர்களும், துணைநிலை அமைப்பின் பொறுப்பாளர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் கலந்து காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தந்தை தொல்காப்பியன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.