உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் ரெயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு- பாலக்காடு- திருச்செந்தூர் ரெயில் வழக்கம் போல் இயங்கும்- தென்னக ரெயில்வே அறிவிப்பு

Published On 2022-09-28 14:12 IST   |   Update On 2022-09-28 14:12:00 IST
  • பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரெயில்கள் ரத்து அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
  • மயிலாடு துறையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும்.

நெல்லை:

கோவில்பட்டி அருகே குமாரபுரம் ெரயில் நிலைய ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ரத்து அறிவிப்பு வாபஸ்

இதனால் இன்று முதல் 3 நாட்களுக்கு பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரெயில்கள் (16731/16732) கோவில்பட்டி மற்றும் மதுரை - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்க ப்பட்டிருந்தது.

இந்நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுவதால் பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ெரயில்கள் ரத்து அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், அவை வழக்கம்போல் இயங்கும் எனவும் தென்னக ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை வரை நீட்டிப்பு

இதேபோல் மயிலாடு துறை - திண்டுக்கல் இடையே இயக்கப்பட்டு வரும் விரைவு ரெயிலையும், மதுரை- செங்கோட்டை ெரயிலையும் ஒன்றாக இணைத்து ஒரே ெரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த மாதம் 24-ந்தேதி மயிலாடுதுறை - திண்டுக்கல் - மயிலாடுதுறை விரைவு ெரயில்கள் (16847/16848) மற்றும் மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ெரயில்கள் (06665/06662) ஆகியவை ஒன்றாக இணை க்கப்பட்டு ஒரே ெரயிலாக புதிய எண்களுடன் இயக்கப்படும்.

பொதுபெட்டிகள்

அதன்படி மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ெரயில் (16847) மயிலாடு துறையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடு துறை விரைவு ெரயில் (16848) செங்கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.

இந்த ெரயில்கள் கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்ப ரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ெரயில்களில் 12 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்புடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News