தூத்துக்குடி ஒன்றியத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம்
- தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
- மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணகுமார் விண்ணப்ப படிவத்தை வழங்கி புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
முகாமிற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் மாடசாமி தலைமை தாங்கி னார். கிளை செயலாளரும், ஊராட்சி உறுப்பினருமான ஜேசு ராஜா, பாரதிராஜா, தங்க மாரிமுத்து, உலகநாதன், மூர்த்தி, ஆனந்தன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செய லாளரும், மாப்பி ள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர், கூட்டுறவு வங்கி தலைவரு மான சரவணகுமார் விண்ணப்ப படிவத்தை வழங்கி புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வீடு, வீடாக சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை யும் மேற்கொ ண்டார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான அருண்குமார், ஒன்றி கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ் பாலன், தொம்மை சேவியர், தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, ஒன்றிய அவை தலைவர் முருகன், கணேசன், ராஜ்குரூஸ், தி.மு.க. இளைஞரணி கவுதம் உட்பட நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.