உள்ளூர் செய்திகள்

விருதுநகரில் நாளை நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

Published On 2022-09-14 08:57 GMT   |   Update On 2022-09-14 08:57 GMT
  • ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15-ந் தேதி தி.மு.க., முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இந்த முப்பெரும்விழா நாளை மாலை 4 மணிக்கு விருதுநகர் பட்டம் புதூரில், அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுஅரங்கத்தில் நடைபெறுகிறது.

உடன்குடி:

தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தி.மு.க. உருவாக்கப்பட்ட நாள், தந்தைபெரியார் பிறந்த நாள் என ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15-ந் தேதி தி.மு.க., முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிடமாடல் அரசின் மக்கள் நல திட்டங்கள் அமல்படுத்தி எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை அடைவதற்குஅயராது உழைத்துவரும் தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கியும், கழக முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவாகவும், திராவிட மாடல் புத்தக வெளியிட்டு விழாவாகவும், முதல்-அமைச்சர் பேருரை ஆற்றும் விழாவாகவும் நடைபெற உள்ளது. இந்த முப்பெரும்விழா நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு விருதுநகர் பட்டம் புதூரில், அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுஅரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் நிர்வாகிகளும், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும், சார்பு அணிகளின் நிர்வாகிகளும், கிளை கழக நிர்வாகிகளும், கழக முன்னணியினரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News