ஊட்டியில் குடிநீர் ஏ.டி.எம்.களில் தண்ணீர் வருவதில்லை-சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு
- 19 வகை பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் விற்க அரசு தடை விதித்தது.
- குடிநீர் ஏ.டி.எம்.களை முறையாக பராமரிக்க பராமரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஊட்டி,
நீலகிரி சுற்றுசூழலை பாதுகாக்க 19 வகை பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர், குளிர்பானம் விற்க அரசு தடை விதித்தது.
இதைதொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டி தொட்டபெட்டா, படகு இல்லம், பைக்காரா, தாவரவியல், ரோஜா, சிம்ஸ், காட்டேரி பூங்கா உட்பட 70 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டன.
இந்த வாட்டர் ஏ.டிஎம்களில் பல இடங்களில் குடிநீர் வருவதில்லை. சில ஏடிஎம்களில் எந்த காயின் போட்டாலும் காற்று தான் வருகிறது.
குறிப்பாக சுற்றுலா தலங்கள் முன்பு உள்ள குடிநீர் ஏ.டி.எம்.கள் பல மாதங்களாக செயல்படாமல் கிடக்கிறது.நாணயம் செலுத்தும் பகுதி இயங்காமல் இருக்கிறது. பகலில் வெயில் அதிகமாக உள்ளது.
இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் எந்திரங்களில் குடிநீர் கிடைக்காததால் அவதி அடைந்து உள்ளனர்.
பைன் பாரஸ்ட் பகுதியில் ஒரு பெண்மணி மிளகாய் தொட்டு மாங்காய் சாப்பிட்டு காரம் தலைக்கு ஏறியதால் தண்ணீருக்கு அலைந்ந காட்சி பரிதாபமாக இருந்தது
பிளாஸ்டிக் பயன்பா ட்டை குறைக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்று என்பது முறையானதாக அனைவருக்கும் எப்போதும் உபயோக படுத்துவதாக இருக்க வேண்டும் அவைகளை முறையாக பராமரிக்க பராமரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தி தெரிவித்தனர்