உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

பள்ளி வாகனங்களை டிரைவர்கள் கவனமாக இயக்க வேண்டும்- கலெக்டர் அறிவுரை

Published On 2022-06-19 15:12 IST   |   Update On 2022-06-19 15:12:00 IST
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 101 பள்ளிகளை சேர்ந்த 945 வாகனங்கள் உள்ளது.
  • வாகனங்களில் இருபுற மும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள், கைபேசி எண்கள் கட்டாயம் எழுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரி மைதானத்தில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:

தொலைபேசி எண்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 101 பள்ளிகளை சேர்ந்த 945 வாகனங்கள் உள்ளது. இதில், முதற்கட்டமாக 278 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் வாகனங்களில் பாதுகாப்பாக ஏறும் பொழுது படிகட்டுகள் மற்றும் தரைதளம் சரியான அளவு இருக்கிறதா என அளவீடு செய்யப்பட்டது. வாகனங்களில் இருபுற மும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள், கைபேசி எண்கள் கட்டாயம் எழுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள், பணிபுரியும் நடத்துனர்கள் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடனும் பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவசர வழி கதவுகள், ஜி.பி.ஆர்.எஸ். கருவி பெருத்தம், தீயணைப்பு கருவிகள் செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு செயல்விளக்கம் ஓட்டு நர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது, வட்டார போக்கு வரத்து அலுவலர் காளியப்பன், துணை போலீஸ்சூப்பிரண்டு விஜயராகவன், மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர் மகாலிங்க மூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News