கடலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி:கலெக்டர், எம்.எல்.ஏ.,மேயர் பங்கேற்பு
- போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- கடலூர் ஜவான் பவன் சாலையில் தொடங்கி அண்ணா பாலம் வழியாக கடலூர் டவுன்ஹால் வரை சென்று முடிவடைந்தது.
கடலூர்:
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கடலூர் ஜவான் பவான் சாலையில் நடைபெற்றது. இப் பேரணியை கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, உதவி ஆணையர் லூர்துசாமி, கோட்ட கலால் அலுவலர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் பேரணி கடலூர் ஜவான் பவன் சாலையில் தொடங்கி அண்ணா பாலம் வழியாக கடலூர் டவுன்ஹால் வரை சென்று முடிவடைந்தது. அப்போது போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்த பேரணியில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர் சரத் தினகரன், கல்லூரி மாணவ -மாணவிகள், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.