உள்ளூர் செய்திகள்
சிதம்பரம் அருகே என்ஜினீயரிங் வாலிபர் திடீர் மாயம்
- விஷ்வா (வயது 24). என்ஜினீயரிங் முடித்து வீட்டில் உள்ளார்.
- தனது மகனை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.
கடலூர் :
கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவை சேர்ந்தவர் சேகர். அவரது மகன் விஷ்வா (வயது 24). என்ஜினீயரிங் முடித்து வீட்டில் உள்ளார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த சேகர் தனது மகனை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் விஷ்வா கிடைக்கவில்லை. இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் சேகர் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விஷ்வா என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.