உள்ளூர் செய்திகள்

15 கி.மீ. தூர பி.எஸ்.என்.எல். பைபர் கேபிளை திருடிய மர்ம நபர்கள்

Published On 2022-07-11 15:53 IST   |   Update On 2022-07-11 15:53:00 IST
  • ஆசனூரில் இருந்து மாவள்ளம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு பி.எஸ்.என்.எல். பைபர் கேபிளை மர்ம நபர்கள் வெட்டிவிட்டு சென்றனர். இதனால் நேற்று முதல் முதல் தொலை தொடர்பு சேவை இல்லாமல் மலை கிராம மக்கள் அவதிபட்டு வருகின்றன.
  • இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தாளவாடி:

தாளவாடி அடுத்த ஆசனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் செல்போன் சேவை இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர தேவைக்கு கூட உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்து வந்தனர்.

பி.எஸ்.என்.எல். பைபர் கேபிள் மூலம் கெத்தேசால், மாவள்ளம், தேவர்நத்தம் குளியாடா போன்ற 30-க்கும் மேட்பட்ட மலை கிராமங்களுக்கு லேண்ட்லைன் செல்போன் சேவை பி.எஸ்.என்.எல். மூலம் வழங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக செயல்பட்டுவந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை ஆசனூரில் இருந்து மாவள்ளம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு பி.எஸ்.என்.எல். பைபர் கேபிளை மர்ம நபர்கள் வெட்டிவிட்டு சென்றனர். இதனால் நேற்று முதல் முதல் தொலை தொடர்பு சேவை இல்லாமல் மலை கிராம மக்கள் அவதிபட்டு வருகின்றன.

இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News